ஜம்முவில் இருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்ட குலாம் நபி ஆசாத்

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2019, 07:11 PM IST
ஜம்முவில் இருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்ட குலாம் நபி ஆசாத் title=

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

ஜம்மு பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370_வது பிரிவை நீக்கியது தொடர்பாக ஆலோசனை செய்ய நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு ஆசாத் சென்றார். ஆனால் அவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சனைகள் ஏற்ப்படலாம் எனக்கூறிய போலீசார், அவரை மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினார்கள். 

டெல்லிக்குத் திரும்பிய ஆசாத், 370வது பிரிவு நீக்கியதையும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் கடுமையாக விமர்சித்தார். அவர் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஒரு கருப்பு சட்டம் என்று ஆவேசமாகக் கூறினார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் விழாவையொட்டி நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கட்சி ஏற்பாடு செய்திருந்த விழாவில் ஆசாத் கலந்து கொள்ள சென்றதாக கட்சி செய்தித்தொடர்பாளர் அப்துல் ரஷீத் சவுத்ரி தெரிவித்தார்.

Trending News