சபரிமலையில் இன்று காலை ஐயப்பனை தரிசிக்க வந்த இரண்டு பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
#Kerala: Two women who reached Nilakkal base camp today to trek to #SabarimalaTemple, returned after police warned them about the protesters gathered in Pamba.
— ANI (@ANI) January 19, 2019
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் , இன்று காலை இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அந்த இரு பெண்களும் திரும்பிச் சென்றனர்.