அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

இந்திய பங்குச் சந்தையும் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சரிந்தன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2022, 04:42 PM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு title=

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில், உலகம் முழுவதிலும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகிறது.

மேலும், பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இங்கிலாந்திலும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. சீனாவிலும் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது. திங்களன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. ரூபாய் மதிப்பு 51 காசுகள் சரிந்து ஒரு டாலர் விலை 77.41 ஆக சரிந்தது. கடந்த மார்ச்  மார்ச் மாதத்தில் ரூபாயின் மதிப்பி 76.98 என்ற அளவில் இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிரெட் பிஸ்கெட் விலை உயரலாம்; வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்திய பங்குச் சந்தையும் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சரிந்தன. சென்செக்ஸ் 55,000 என்ற அளவிற்கு கீழே சரிந்து 54,470 என்ற அளவை எட்டியது, நிஃப்டியும் 16,301க்கு கீழே சென்றது. இன்று, ரிலையன்ஸ், டாடா பவர் போன்ற பங்குகள் பெரிய இழப்பைச் சந்தித்தன.அதே நேரத்தில் பார்மா மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளும் சரிந்தன.

டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை நிஃப்டியின் அதிக நஷ்டமடைந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. யுபிஎல், பவர்கிரிட், பஜாஜ் ஆட்டோ, சிப்லா ஆகியவை அதிக லாபம் ஈட்டியவர்களின் பட்டியலில் இருந்தன. இருப்பினும் வங்கி மற்றும் ஐடி நிறுவன பங்குகளில் லாபம் காணப்பட்டது.

மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: அரசு தரப்பில் அனுப்பப்பட்ட உத்தரவு, விவரம் இதோ 

வெள்ளியன்று, பிஎஸ்இ சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் குறைந்து 55,000க்கும் கீழேயும், என்எஸ்இ நிஃப்டி 271.40 புள்ளிகள் சரிந்து 16,411.25 புள்ளிகளிலும் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News