புதுடெல்லி: தனது பேச்சு பாணியால் எப்போதும் விவாதத்தில் இருக்கும் லாலு யாதவ், யார் பிரதமரானாலும் சரி, ஆனால் திருமணம் செய்து தம்பதியாக இருப்பவர்கள் தான் பிரதமராக வேண்டும் என்று கருத்து சொல்லி மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ள வித்தியாசமான கருத்து பல்வேறுவிதமான எதிர்வினைகளை எதிர்கொள்கிறது.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? இந்தக் கேள்விக்கு பதிலளித்த லாலு யாதவ், யார் பிரதமரானாலும் அவர் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது. பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் பிரதமர் வசிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி குறித்து லாலு யாதவ் கூறுகையில், யாரும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில்லை, சரத் பவார் ஜி மிகவும் வலிமையான தலைவர் என்று தெரிவித்தார்.
#WATCH | When asked about the PM face from Opposition & his earlier advice to Rahul Gandhi to get married, RJD chief Lalu Prasad Yadav says, "Whoever becomes the PM should not be without a wife. Staying at PM residence without a wife is wrong. This should be done away with..,"… pic.twitter.com/uh0dnzyoJk
— ANI (@ANI) July 6, 2023
2024ல் 300க்கும் அதிகமான இடங்களை மகா கூட்டணி பெறும் என்று தனது கருத்தைத் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், இன்று அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை தனது பாணியில் பேசி, அவருடைய பேட்டியை வைரல் ஆக்கிவிட்டார்.
மேலும் படிக்க | பற்றி எரியும் பிரான்ஸ்! எமர்ஜென்சிக்கு காரணம் என்ன? ஆணவக் கொலைகளும் வன்முறைகளும்
பிரதமர் பதவிக்கான போட்டியாளராக இருப்பார் ராகுல் காந்தி என பரவலாக நம்ப்படும் நிலையில், ராகுல் காந்திக்கு பிரதமராக வேண்டுமானால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார் என்று, லாலு யாதவ் கூறிய கருத்து புரிந்துக் கொள்ளப்படுகிறது.
'யார் பிரதமராக இருந்தாலும், மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது. பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் வாழ்வது தவறு, தற்போது பிரதமராக இருக்கும் திரு நரேந்திர மோடி, தனியாக வாழ்கிறார் என்றும் சுட்டிக் காட்டிய லாலு பிரசாத் யாதவ், ஊழல்வாதிகளின் கன்வீனர் நரேந்திர மோடி என்றும், ஊழல்வாதி என்று அழைக்கப்பட்டவரை அமைச்சராக்கியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
'அஜித் பவாரின் கருத்தும் சரத் பவாரின் ஓய்வும்'
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசிய லாலு யாதவ், '17 கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைகின்றனர். பாஜக தலைவர்கள் சொல்வதை சொல்லட்டும். அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். சரத் பவார் மிகவும் வலிமையான தலைவர் ஆனால்,அவரது நெருங்கிய உறவினர் அஜித் பவார் கலகம் செய்து வருகிறார். அவர் சொல்வதால் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதை அஜித் பவார் எப்படி தீர்மானிக்க முடியும்?” என்று லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | இந்தியாவும் சீனாவும் பாங்காங் த்சோ ஏரிக்கு அருகில் உள்கட்டமைப்பை அதிகரிக்கின்றன
தற்போது, லாலு யாதவ் மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் தனது பாணியில், அதிரடியாக ஆனால், ஜாலியாக கருத்துக்களை தெரிவித்தார்.
கடந்த முறை பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு யாதவ் அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீழ்ப்படிந்து திருமணம் செய்து கொள்ளுங்கள், சொன்னப் பேச்சை கேட்பதே இல்லை என்று உங்கள் அம்மா எங்களிடம் குறை கூறுகிறார் என்று லாலு யாதவ் ராகுல் காந்தியிடம் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ