2019-ஆம் ஆண்டு ஆஸ்கார்ஸ் விருதிற்கு, இந்தியாவின் சார்பில் ஆஸாமிய திரைப்படமான "வில்லேஜ் ராக்ஸ்டார்" பரிந்துரைக்கப் பட்டுள்ளது!
அஸாம் மாநிலத்தை சேர்ந்த பெண் இயக்குயர் ரீமா தாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அஸாமிய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் ஏமாற்றம் அளித்து வந்த நிலையில் இந்தாண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியலில் இப்படம் இடம்பிடித்தது.
அஸாம் மாநில கிராமப்புற குழந்தைகளின் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குநர் இயக்கியுள்ளார். அஸாம் மாநில அப்பாவி மக்களின் வாழ்க்கை, கடின உழைப்பு, இராமங்களோடு இணைந்துள்ளள சவால்கள், இயற்கை பேரிடர்கள் இவைகளுக்கிடையே சிறுமி ஒருவர் தன்னிடம் இருக்கும் கிட்டாரினை வைத்து வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற இசைக்குழுவினை அமைக்க முயற்சிப்பதே இப்படத்தின் கரு. இயக்குநரின் கிராமத்தை சுற்றியுள்ள குழந்தைகள், அவர்களுடைய குடும்ப நபர்களே அப்படத்தில் நடித்துள்ளனர்.
பெரும் பட்ஜட்டில் எடுகப்பட்ட பத்மாவத், போன்ற படங்கள் இப்பட்டியலில் இருந்து வெளியேறிய நிலையில் வில்லேஜ் ராக்ஸ்டார் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளது.
91-வது ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்நாளில் "வில்லேஜ் ராக்ஸ்டார்" திரைப்படத்திற்கு விருது கிடைக்குமா என தெரியவரும்.