புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் தரவுகளை முழுமையாக பாதுகாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தவிருந்த புதிய விதி 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போது ஜூன் மாதத்திற்குப் பிறகு கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான டோக்கனைசேஷன் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
சிறிய கடையாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் கார்டு மூலம் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கையில் ரொக்கம் வைத்துக் கொள்ளும் பழக்கம் கிட்டத்தட்ட அரிதாகி விட்ட அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் டெபிட் கார்டுகளின் தரவை பாதுகாக்கவும், மோசடிகளை தடுக்கவும், ரிசர்வ் வங்கி புதிய விதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில், நீங்கள் கிரெட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, அந்த வணிகர் அல்லது நிறுவனம் உங்கள் தரவைச் சேமிக்கிறது. இது தரவு திருடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டோகனைசேஷன் விதி அமல்படுத்தப்பட உள்ளது.
ALSO READ | சீரியல் சப்தத்தில் பெண்கள் சமையல்..! பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடர்கள்
டோக்கனைசேஷன் (Tokenization) என்றால் என்ன?
நாம் ஷாப்பிங் செய்யும் போது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் மூலம் பணம் செலுத்தும் போது, டேட்டாவை ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது வணிகரிடம் கொடுக்கிறோம், இந்த வணிகர் அல்லது நிறுவனம் நமது தரவைச் சேமித்து வைக்கும். இது தரவு திருடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் எந்தவொரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் டோக்கன் எண்ணையும் வழங்கும், இது டோக்கனைசேஷன் என்று அழைக்கப்படுகிறது.
'கார்டு டோக்கன்' சிஸ்டம் என்றால் என்ன?
இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் கார்டு விவரங்களை எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டுடனும் பகிர வேண்டியதில்லை. தற்போது அப்படி இல்லை, இப்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தாலோ அல்லது வாகனத்தை முன்பதிவு செய்தாலோ கார்டின் விவரங்களைக் கொடுக்க வேண்டும், மேலும் வாடிக்கையாளர் அட்டையின் முழு விவரங்களும் இங்கே சேமிக்கப்படும். டோக்கன் முறையால் இந்த நடமுறை முற்றிலும் நீக்கப்படும்.
டோக்கன் முறையில் விவரங்களை உள்ளிட தேவையில்லை
டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டவுடன் உங்கள் அட்டை விவரங்களை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, 'டோக்கன்' எனப்படும் தனித்துவமான மாற்று எண் உள்ளது. அது அது உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி இதனால், உங்கள் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற எந்த இ-காமர்ஸ் இணையதளத்திலும் ஷாப்பிங் செய்த பிறகு நீங்கள் பணம் செலுத்தும்போது, உங்கள் 16 இலக்க அட்டை எண்ணை உள்ளிட வேண்டியதில்லை, அதற்கு பதிலாக நீங்கள் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும்.
ALSO READ | பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR