ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் புகழாரம்..

ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியுள்ளார்!

Last Updated : Dec 17, 2018, 10:39 AM IST
ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் புகழாரம்.. title=

ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியுள்ளார்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. 5 மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்வதாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், மூன்று மாநிலங்களில் காங்கிரசின் வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ளஅவர், பாஜகவினர் கூறியது போல் ராகுல் காந்தி சிறுவன் அல்ல என்றும், தேர்ந்த தலைவராக அவர் உருவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். 

 

Trending News