சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSME) ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மோடி அவர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தார். அதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு 59 நிமிடங்களுக்குள் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் பெருவதற்கு ஏற்ற வகையில் வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Watch LIVE: PM @narendramodi launches the #MSME 'Support & Outreach Program' in Delhi
YouTube: https://t.co/wby9yQ0Na6
Facebook: https://t.co/7bZjpgHaMy— PIB India (@PIB_India) November 2, 2018
இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான உதவித்திட்டம் செயல்படுத்தப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு, மத்திய அரசும் நிதி நிறுவனங்களும் பல்வேறு வசதிகள் செய்திருப்பது பற்றியும், இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்வது பற்றியும் எடுத்துரைப்பதற்காக இந்த மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்த மோடியில் சில முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி வரையிலான கடன் வெறும் 59 நிமிடங்களில் கிடைக்கும்.
- GST கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் 1 கோடி ரூபாய்க்கு அல்லது அதிக கடன் பெறும் கடன்களில் 2 சதவிகித வட்டிவிகிதம் கிடைக்கும்.
- 500 கோடி ரூபாய்க்கு மேல் வர்தகம் ஈட்டும் நிறுவனங்கள், வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஈ-தள்ளுபடி அமைப்பு கீழ் கொண்டுவரப்படும்.
- நாடெங்கிலும் கருவி அறை அமைப்பதற்கு ரூ .6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. இந்த நிதியின் கீழ் 20 மையங்கள் நாட்டிற்குள் உருவாக்கப்படும் முதலியன...