பிரதமர் மோடி 11வது BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் புறப்பட்டார்

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (BRICS summit) பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரேசில் (Brazil) நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2019, 06:34 PM IST
பிரதமர் மோடி 11வது BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் புறப்பட்டார் title=

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (BRICS summit) பங்கேற்க இரண்டு நாள் பயணமாக (13-14 November) இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேசில் (Brazil) நாட்டுக்கு, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது இது ஆறாவது முறையாகும், இந்த அமைப்பின் முதல் மாநாடு 2009 ஆம் ஆண்டு ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி ம்,முதல் முறையாக 2014 இல் பிரேசிலில் உள்ள ஃபோர்டாலெஸாவில் (Fortaleza) நடைபெற்ற மாநாட்டில் இருந்து கலந்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பரிகா போன்ற நாடுகள் உறுப்பினராக உள்ளனர்.

உலக மக்கள்தொகையில் 42 சதவீதத்தை உள்ளடக்கிய பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து முக்கிய உலக பொருளாதார நாடுகள் கூட்டமைப்பில் "பிரிக்ஸ்" அமைப்பில் ஒன்றாக அங்கம் வகின்றன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் உலக மொத்த உள்நாட்டு (Global Gross Domestic) உற்பத்தியில் 23 சதவீதமும், அதேபோல உலக வர்த்தகத்தில் (World Trade) 17 சதவீத பங்கையும் பங்களிக்கிறது.

இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக "கருப்பொருள்" என்ற ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் இரண்டு நாட்கள் "பிரிக்ஸ்" உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

நவம்பர் 13 ஆம் தேதி காலையில் பிரதமர் மோடி பிரேசிலுக்கு சென்றடைவார். இந்த பயணத்தின் முதல் நாளில் பிரதமர் (Prime Minister) மற்ற நாடுகளுடன் இருதரப்புகளை பேச்சுவாரத்தைகளை நடத்துவார். அத்துடன் பிரிக்ஸ் வணிக மன்றத்தின் நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுவார் என MEA வெளிவிவகார செயலாளர் (Economic Relations) டி.எஸ்.திருமூர்த்தி (TS Tirumurti) செய்தியாளர்களிடம் கூறினார். 

பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Russian President Vladimir Putin) மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங் (Chinese Premier Xi Jinping) ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பல்வேறு துறைகளில் பல மந்திரி கூட்டங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. இதில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளது. 

பல ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதம் தொடர்பான குறிப்பிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும் ஆலோசனைகளையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

Trending News