கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என பிரகலாத் ஜோஷி கூறுகிறார்.
முந்தைய அமர்வின் போது, இரு அவைகளிலும் மொத்தம்19 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களவையில் 18 மசோதாக்களும், மாநிலங்கள் அவையில் ஒரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு பட்ஜெட் தொடர்பான செயல்முறை நிறைவடைந்ததும் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டன.
ஹூப்ளி (Hubli): கோவிட் -19 தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். கொரோனா தொற்று பரவாமல் அதடுப்பது தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு நடத்தப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தெரிவித்தார்.
ALSO READ | கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தாராவி எடுத்துக்காட்டாக விளங்குகிறது: WHO புகழாரம்
"நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நிச்சயமாக நடைபெறும். அரசு அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக மார்ச் மாதத்தில், நடந்த பட்ஜெட் அமர்வின் போது மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 13 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
அமர்வின் போது, இரு அவைகளிலும், மக்களவையில் 18 மற்றும் மாநிலங்கள் அவையில் 1 என்ற அளவில் 19 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பட்ஜெட் நடைமுறை அனைத்தும் நிறைவடைந்ததும் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
ALSO READ | கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா…
கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட்டன. ஜூன் 1 ம் தேதி, மாநிலங்களவை தலைவர் திரு.எம்.வெங்கய்ய நாயுடு (M Venkaiah Naidu) மற்றும் மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா (Om Birla )ஆகியோர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
COVID-19 க்கு எதிரான போராட்டம் என்றும் குறுகிய காலத்தில் முடிவையும் போராட்டம் அல்ல, அது ஒரு நீண்ட நெடிய பயணம் என்ற வரும் அறிக்கைகளை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.