மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, 40 சிவசேனா எம்எல்ஏ- க்களும், ஏழு சுயேச்சை எம்எல்ஏ- க்களும், தன்னுடன் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தலைநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதால், மும்பை போலீஸார் 144 தடை விதித்துள்ளனர். தற்போது 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை காவல்துறையின் இந்த உத்தரவு ஜூலை 10 வரை அமலில் இருக்கும். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருடம் உள்ள இதர கிளர்ச்சி எம்எல்ஏக்களுக்கு சிவசேனா ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க, மாநில காவல்துறை இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
புனேயிலும் 144வது பிரிவு அமல் படுத்தப்பட்டுள்ளது
சிவசேனாவின் கிளர்ச்சி எம்எல்ஏவும், மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையாக புனே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய உத்தரவு ஜூன் 30 முதல் மாவட்டத்தில் அமலுக்கு வருகிறது என்றும், இப்போது மாவட்டத்தில் எந்த அரசியல் நடவடிக்கையும், கோஷங்களும் அனுமதிக்கப்படாது என்றும் கவால் துறை எச்சரித்துள்ளது.
புனேயில் சிவ சைனிக் தொண்டர்கள் கலவரம்
புனேவில் சிவசைனிக் தொண்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். புனேவில் உள்ள ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி எம்எல்ஏ தானாஜி சாவத்தின் அலுவலகத்தை தாக்கினர். அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR