ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்

UNSC  கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை வகிக்கிறார், ஐநா அமைப்பிற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 05:32 PM IST
  • UNSC கடல்சார் பாதுகாப்பு குறித்த உயர்மட்ட விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று தலைமை
  • விவாதம் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார் title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9, 2021) கடல் பாதுகாப்பு குறித்த UNSC உயர்மட்ட  விவாதத்திற்கு தலைமை தாங்குகிறார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர்  என்ற பெருமையையும் பெறுகிறார்.

இந்த விவாதம் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி (PM Modi) தலைமை வகிக்கும் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்கப் போகும் பல உலகத் தலைவர்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken), நைஜரின் தலைவர் முகமது பஸூம் (Mohamed Bazoum), கென்யாவின் அதிபர் உஹுரு கென்யாட்டா, வியட்நாம் பிரதமர் பம் மின் சின் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு தலைவர் (DRC) பெலிக்ஸ் சிசேகேடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ஐ.நா அமைப்பு மற்றும் முக்கிய பிராந்திய அமைப்புகளைச் சேர்ந்த பல உயர்மட்ட விரிவுரையாளர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

ALSO READ | ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை

'கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதலில்  சர்வதேச ஒத்துழைப்பு ' பற்றிய திறந்த விவாதத்தில், கடல் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதற்கான வழிகளில் கவனம் செலுத்துவது பற்றியும் கடல் சார்ந்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற உயர் மட்ட திறந்த விவாதத்தில் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி நிரலாக கடல் பாதுகாப்பு குறித்து 'முழுமையான முறையில்' விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் PMO தெரிவித்துள்ளது.

"கடல் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை எந்த ஒரு நாடும் தனியாக கையாள முடியாது என்பதால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், இதனை முழுமையான முறையில் கருத்தில் கொள்வது அவசியம்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இந்த நிகழ்வு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ALSO READ | பிரதம மந்திரி ஏழை நல்வாழ்வு உணவு திட்ட பயனாளிகளுடன் இன்று பிரதமர் உரையாடல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News