புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். ஒவ்வொரு முறையும் போல காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். பொது முடக்கத்தை திறப்பதாக நேற்று (சனிக்கிழமை) மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஒரு கட்டமாக திறக்கப்படும். இந்த திறத்தல்-1 (Unlock-1) குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசலாம். இது மோடியின் 65 வது "மன் கி பாத்" நிகழ்ச்சியாக இருக்கும்.
பொது முடக்கம் திறக்கப்பட்டவுடன், ஜூன் 1 முதல் நாட்டில் என்ன மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசலாம். மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டு நேற்று நிறைவடைந்துள்ளது. இது குறித்தும் பேசலாம்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவை பின்தொடர்வது பற்றி பேசினார். மார்ச் 24 அன்று மோடி அரசு 21 நாள் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவை விதித்தது. பின்னர் ஊரடங்கு மே 31 வரை என மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
கோவிட் -19 தொற்று மூலம் சனிக்கிழமை காலை 8 மணி வரை 265 பேர் இறந்தனர் மற்றும் 7,964 புதிய பாதிப்பு பதிவாகியுள்ளன. இதன் மூலம், மத்திய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த தொற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. நாட்டில் இன்னும் 86,422 பேர் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 82,369 பேர் ஆரோக்கியமாகி விட்டதாகவும், ஒரு நோயாளி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.