G20 உச்சி மாநாடு முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா, துருக்கி அதிபர் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங், சிலே அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Last Updated : Jun 29, 2019, 01:17 PM IST
G20 உச்சி மாநாடு முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி! title=

G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா, துருக்கி அதிபர் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங், சிலே அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் G20 உச்சி மாநாடு நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைப்பெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார். இதைத்தவிர, மாநாட்டின் இடையே தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்தோனேசிய அதிபருடன் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்வழி, விண்வெளி, இந்தோ பசிபிக் பிராந்தியம் உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாராவுடன் சந்திப்பு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், வர்த்தகம், முதலீடு, சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதைத்தொடர்ந்து, துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தகவல் தொழில்நுட்பம், விமான போக்குவரத்து உள்ளிட்ட இருதரப்பு துறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துருக்கி முழு ஆதரவு தரும் என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங், சிலே அதிவர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Trending News