டிரைவர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!!

ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 28, 2020, 03:00 PM IST
  • ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு என பிரதமர் குறிப்பிட்டார்.
  • 2014 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்ததாக பிரதமர் கூறினார்
டிரைவர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!! title=

பிரதமர் நரேந்திர மோடி, சேவையில் டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்தார்.  ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி (PM Narendra Modi) , 2025 ஆம் ஆண்டிற்குள் 25 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்றார். மேலும், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா மிக வேகமாக முன்னேறுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்ததாக குறிப்பிட்ட அவர், மத்திர அரசு தொடர்ந்து பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவையை தொடக்கியது என்றார்.

தில்லியில் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன் வழித்தடத்தில் ஜனக்புரி முதல் பொட்டானிகள் கார்டன் நிலையம் வரையிலும், இந்த டிரைவல் இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோ சேவை (Delhi Metro) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை பிரதமர் மோடி  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
மேலும், , 57 கி.மீ நீளமுள்ள பிங்க் நிற லைன் வழித்தடத்தி, மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வரையிலும். இந்த டிரைவர் இல்லாமல் இயங்கும் தனியங்கி சேவை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில்  கார்பரேஷன் (DMRC) தெரிவித்துள்ளது. 

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயன்படுத்தக் கூடிய தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த கார்டை வைத்திருப்பவர்கள், மெட்ரோ ரயில் மட்டுமல்லாது விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவை, பஸ் சேவை, பார்க்கிங் கட்டணம் செலுத்துதல், ஷாப்பிங் செய்தல் என அனைத்து வகையிலும் பயன்படுத்த முடியும்.

ALSO READ | புத்தாண்டில் மந்திராலயம், ஷீரடி செல்ல IRCTC வழங்கும் சூப்பர் பேக்கேஜ்..!!! 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News