உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸாச்சாரி சுவாமி என்பவரையும், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவரையும்,  கோவை சிறுமி காயத்ரியையும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2020, 02:54 PM IST
  • தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸாச்சாரி சுவாமி என்பவரையும், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவரையும் பிரதமர் பாராட்டினார்.
  • கோவை சிறுமி காயத்ரியையும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார்.
  • உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்யக்கூடாது என்று பிரதமர் கூறினார்.
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி title=

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி  ஞாயிற்றுகிழமைகளில்,  அகில இந்திய வானொலியின் மூலம், ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலமாக மக்களுடன் உரையாடி வருகிறார். அந்தவகையில், இன்று 2020 டிசம்பர் 27 அன்று, 72வது முறையாக 2020 வருடத்தின் கடைசி  ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுடன் உரையாற்றினார் உரையாற்றினார்.  

இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில், இந்தியாவில் (India) தயாரிக்கப்படும் உள்நாட்டுப் பொருட்களை வாங்கி, ஆத்மநிர்பர் பாரத், அதாவது தற்சாப்பு இந்தியாவை ஊக்குவிக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார்.  நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் பிரபலமாகி, ஒவ்வொரு இடத்தையும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார். 

உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்யக்கூடாது என்று தெரிவித்த அவர், மக்கள் நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க  உறுதி ஏற்று, வோக்கல் பார் லோக்கர் என்னும் கருத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்.  உலக தரத்தில்  சிறந்த தயாரிப்புகளை கொண்டு வர தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் முன்வந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பிர்தமர் மோடி (PM Narendra Modi)  தெரிவித்தார்.

ALSO READ | Jammu Kashmir-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

 

கொரோனா (Corona) காலத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டு நமக்கு புதிய வாய்ப்புகளையும், பாதைகளையும் காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

தனது மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாய்காக சர்க்கர நாற்காலியை வழங்கிய கோவை சிறுமி காயத்ரியையும், புதுமையான வழியை முயற்சித்து, பாடம் நடத்தி வரும் விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவரையும் அவர் பாராட்டினார். 

ஆசிரியை ஹேமலதா குறித்து குறிப்பிடுகையில், தொன்மையான தமிழ் மொழியை பயிற்றுவிக்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனிமேஷன் வீடியோக்களை தயாரித்து, மாணவர்களை திறமையாக வழிநடத்தி வரும் ஆசிரியை ஹேமலதாவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்த ஸ்ரீநிவாஸாச்சாரி சுவாமி என்பவரையும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். தமிழ் மற்றும் சம்ஸ்கிருதப் பண்டிதரான  ஸ்ரீநிவாஸாச்சாரி, தனது 92வது வயதில்,  16 ஆன்மிக புத்தகங்களை எழுதி இருக்கிறார் என்பதோடு அதனை தானே கணிணியில் தட்டச்சு செய்திருக்கிறார் என்றும், அது அவருடைய நம்பிக்கையையும் ஆர்வத்தையும் எடுத்து காட்டுகிறது என நரேந்திர மோடி பாராட்டியிருக்கிறார். 

ALSO READ | நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News