புதுடெல்லி: பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் கொரோனா நெருக்கடி காரணமாக அரசாங்கம் இந்த திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) குஜராத்தை சேர்ந்த பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுகிறார்.
இதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதோடு, இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பிரதமர் எடுத்து கூறலாம் என கூறப்படுகிறது.
ALSO READ | புதிய ரேஷன் அட்டை: அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்
பகல் 12:30 மணி முதல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் உரையாட உள்ளார். அப்போது, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் உடன் இருப்பார்கள். இந்த திட்டத்தை மேலும் அதிகமான மக்களுக்கு கிடைக்கச் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த, பொது மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மாநிலத்தில் தொடங்கப்படுகிறது. இது சாதாரண மக்களுக்கு இந்த திட்டத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்வதை எளிதாக்கும்.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ், நாட்டில் 80 கோடி மக்களுக்கு நவம்பர் 2021 வரை இலவச ரேஷன் கிடைக்கும். இந்த திட்டம் ஜூன் 23 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், இலவச ரேஷன் பெறும் காலம் 5 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்கள் ஜூன் 2021 வரை இலவச ரேஷன் பெறலாம் என இருந்த நிலையில். நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் பலனை நாட்டின் 80 கோடி மக்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் கிடைக்கும் வழக்கமான ஒதுக்கீட்டை விட கூடுதலாக, இந்த 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டில் கோவிட் நெருக்கடி காரணமாக அரசாங்கம் இந்த திட்டத்தை தொடங்கியது.
ALSO READ: Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR