மக்களவை தேர்தலில் வெற்றி பெற அரசின் பலத்தை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்!
மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரையில் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் அனல் பறக்கும் பிரச்சாரங்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தலைவர்கள் மற்ற தலைவர்களை சாட மறப்பதில்லை.
அந்த வகையில் தற்போது "மக்களவை தேர்தலில் வெற்றி பெற அரசின் பலத்தை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்". உத்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியும், சஜமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து களம்காண்கிறது.
முன்னதாக ‘பகுஜன் சமாஜ் கட்சியும், சஜமாஜ்வாடி கட்சியும் அமைத்துள்ள கூட்டணி மக்களுக்கான கூட்டணி இல்லை என பிரதமர் மோடி விமர்சித்தார்.’ மோடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவிக்கையில்., "தேர்தலில் வெற்றி பெற அரசின் பலத்தை பயன்படுத்தும் மோடி, பகுஜன் சமாஜ் கட்சியும், சஜமாஜ்வாடி கட்சியும் அமைத்துள்ள கூட்டணி பார்ந்து அஞ்சுகின்றார். தோல்வி பயத்தாலேயே அவர் தற்போது கட்சி தேவைக்காக அரசின் உடைமைகளை தனதாக்குகிறார்" என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் உத்திர பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சஜமாஜ்வாடி கட்சியும் அமைத்துள்ள கூட்டணி மக்களிடையே நல்ல ஆதரவு பெற்றிருப்பதாகவும், மக்களின் வரவேற்கு குறித்து மே 23-ஆம் நாளுக்கு பின்னர் பாஜக அறிந்துக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.