இந்தியா தனது முதல் வாட்டர் மெட்ரோவை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) பெற்றுள்ளது. கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் முதல் வாட்டர் மெட்ரோ தொடங்கப்படவுள்ளது. கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொச்சி வாட்டர் மெட்ரோ ரயில் கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கேரளா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வாட்டர் மெட்ரோ மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கும் சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.
கொச்சி வாட்டர் மெட்ரோ தொடர்பான சில முக்கிய விஷயங்கள்:
1. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படும், மெட்ரோ திட்டம் எட்டு மின்சார கலப்பின படகுகளுடன் தொடங்கும்.
2. கொச்சி நீர் மெட்ரோ துறைமுக நகரம் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் 10 தீவுகளை இணைக்கும்.
3. இந்த கனவு திட்டத்திற்கு கேரள அரசு மற்றும் ஜெர்மன் நிறுவனமான KfW நிதியுதவி அளித்துள்ளது.
மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!
4. ஒட்டுமொத்த KWM (கொச்சி வாட்டர் மெட்ரோ) திட்டத்தில் 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்கள் உள்ளன.
5. முதல் கட்டத்தில், KWM சேவையானது உயர் நீதிமன்ற - முனையங்கள் மற்றும் வைட்டிலா-காக்கநாடு முனையங்களில் இருந்து தொடங்கும். ஹைகோர்ட் டெர்மினலில் இருந்து வைபின் டெர்மினலை பயணிகள் நெரிசலில் சிக்காமல் 20 நிமிடங்களுக்குள் அடைய முடியும். வைட்டிலாவிலிருந்து வாட்டர் மெட்ரோ வழியாக 25 நிமிடங்களில் காக்கநாடு அடையலாம்.
6. கொச்சி வாட்டர் மெட்ரோவின் டிக்கெட் விவரங்கள்: படகு பயணத்திற்கான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 20 ரூபாய். வழக்கமான பயணிகளுக்கு வாராந்திர மற்றும் மாதாந்திர பாஸ்கள் உள்ளன. கொச்சி ஒன் கார்டைப் பயன்படுத்தி கொச்சி மெட்ரோ ரயில் மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோவில் பயணிக்கலாம். கொச்சி ஒன் ஆப் மூலம் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.
7. கொச்சி நீர் மெட்ரோ லித்தியம் டைட்டானைட் ஸ்பைனல் பேட்டரிகளில் இருந்து இயங்கும்.
8. வாட்டர் மெட்ரோ சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மின்சார சக்தி மூலம் இயக்கக்கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது.
9. இதில் குளிரூட்டப்பட்ட படகுகள் பரந்த ஜன்னல்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் உப்பங்கழியின் கவர்ச்சியான காட்சியை கண்டு ரசிக்கலாம்.
10. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு ₹1,137 கோடி.
மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ