இதுதான் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு!

ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா நேற்று அதிகாலை இந்தியா வந்தார். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

Last Updated : Nov 29, 2017, 09:40 AM IST
இதுதான் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு! title=

ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா நேற்று அதிகாலை இந்தியா வந்தார். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இதற்கிடையே நேற்று இரவு வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், முதல் முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபரின் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தினால் ஆன பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.

மரத்தால் ஆன இந்த பெட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாரம்பரிய கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News