Petrol Diesel Rate Increase Soon: இந்தியாவில் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம். நாட்டின் அரச எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே இதற்குக் காரணம். பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.10,196.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய எந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது HPCL-க்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இதுவாகும். முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,795 கோடி நிகர லாபமாக இருந்தது. ஏன் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்திக்கின்றது. அதற்கான காரணம் என்ன? ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் போல மற்ற பெட்ரோலிய நிறுவனங்களின் நிலை என்ன? வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மதிய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை குறித்து பார்ப்போம்.
பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பை சந்திக்க காரணம் என்ன:
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக அவை இயக்க செலவுகளின் விகிதத்தில் வருவாயை இழந்துள்ளன.
மற்ற பெட்ரோலிய நிறுவனங்களின் நிலை என்ன:
HPCL போலவே, மற்ற பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் BPCL ஆகியவையும் கடந்த காலாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை மனதில் கொண்டு விலையில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: 'பொருளாதார சீரழிவு': இலவச அரசியலை கட்டுப்படுத்த விரும்பும் உச்ச நீதிமன்றம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இழப்பு எவ்வளவு:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 1,992.53 கோடி ரூபாயை நிகர இழப்பாக அறிவித்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் 5,941.37 கோடி ரூபாயாகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 6,021.9 கோடி ரூபாயாகவும் இருந்தது.
நாட்டில் உள்ள இரண்டு பெரிய அரசு நிறுவனங்கள் பல நூறு கோடி நஷ்டத்தில் இருந்து மீள கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, வரும் நாட்களில், பெட்ரோல், டீசல் விலையை நிறுவனங்கள் உயர்த்தலாம் என, ஊகிக்கப்படுகிறது.
HPCL இன் தயாரிப்பு விற்பனை வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.77,308.53 கோடியிலிருந்து கடந்த காலாண்டில் ரூ.1.21 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே வருவாய் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
பெட்ரோல் மற்றும் டீசலை நஷ்டத்திற்கு விற்ற எண்ணெய் நிறுவனங்கள்:
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி சராசரியாக ஒரு பீப்பாய்க்கு US$ 109 ஆக இருந்தது, ஆனால் சில்லறை பம்ப்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பீப்பாய்க்கு $85-86 ஆக இருந்தது. இதனால் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஐஓசிஎல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெட்ரோல் மற்றும் டீசலை லிட்டருக்கு ரூ.10 மற்றும் ரூ.14 நஷ்டத்தில் விற்றது.
மேலும் படிக்க: 1800 பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு:
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நிலையற்ற நிலையில் உள்ளது. கச்சா எண்ணெய் நீண்ட காலமாக பேரலுக்கு 100 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதன் காரணமாக இந்திய நிறுவனங்களும் விலை உயர்ந்த கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்த்தப்பட்டது:
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதாவது 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில், மே மாதம், சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.
மேலும் படிக்க: பாதுகாப்பு அச்சுறுத்தல்; 348 செயலிகளை முடக்கிய மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ