உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! லிட்டர் 75.26 ரூபாய்

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2019, 07:36 AM IST
உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! லிட்டர் 75.26 ரூபாய் title=

சவூதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.

இன்று சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 75.26 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 69.57 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:

சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.26 _____ டீசல் - ₹ 69.157
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.42 _____ டீசல் - ₹ 65.82
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.10 _____ டீசல் - ₹ 69.04
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 75.14 _____ டீசல் - ₹ 68.23

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.

Trending News