சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம்

கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 12:52 PM IST
சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம் title=

கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை எம்.ஏ நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புக்கான திருத்தப்பட்டப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. அதன்படி தற்போது முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 

ALSO READ | தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு

இதற்கு பதிலாக தற்போது நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில், சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் இந்த புதிய பாடத்திட்டத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் முதுகலை நிர்வாகவியல்படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்திருப் பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ASLO READ கொரோனா மரணங்களுக்கு ஒன்றிய அரசே இழப்பீடு வழங்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News