இந்தியாவில் இருந்து "தக்காளி" தேவை இல்லை: பாகிஸ்தான்

Last Updated : Sep 27, 2017, 10:00 AM IST
இந்தியாவில் இருந்து "தக்காளி" தேவை இல்லை: பாகிஸ்தான் title=

லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடமிருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறியுள்ளார். 

இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா கூறியுள்ளது. 

பாகிஸ்தான் உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சீராகும். அனால் நாங்கள் எந்த நிலையிலும் இந்தியாவிடம் இருந்து காய்கறிகளை வாங்காது என அவர் கூறியுள்ளார். 

லாகூர் உள்பட பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை ரூ. 300 ஆக உள்ளது என டான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

லாகூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அப்துல் பாசித், இந்தியாவிடம் இருந்து காய்கறிகள் வாங்க மாட்டோம் என மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் அறிவித்து உள்ளதை பாராட்டியுள்ளார். பாகிஸ்தானிடம் நாட்டு மக்களுக்கு உணவளிக்க வளங்கள் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Trending News