2024 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலுக்கு முன்பு, எதிர் கட்சியைச் சேர்ந்த முக்கியமான நபர் ஒருவர் என்னிடம், "நீங்கள் எங்கள் பக்கம் வந்தால் பிரதமர் பதவி தருகிறோம்" என்று கூறியதாக மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆனால் நான் அதனை அப்போதே நிராகரித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கட்சியை உறுதியாக நம்புவதாகவும், அதற்கு மிகவும் விசுவாசமாக இருப்பதாகவும் விளக்கினார். தான் எதிர்பார்த்ததை விட கட்சி ஏற்கனவே எனக்கு நிறைய வழங்கியிருப்பதாகவும், எனவே எந்த சலுகையும் என்னை மாற்ற முடியாது என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?
2024 தேர்தலுக்கு முன்னர், இந்தியாவில் முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதி தன்னுடன் பேச வந்ததாக நிதின் கட்கரி குறிப்பிட்டார். "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சியான பாஜக தனி பெரும்பான்மையாக பொறுப்பேற்கும் அளவுக்கு வாக்குகளைப் பெறாமல் போகலாம் என்றும், மற்ற கட்சிகளின் உதவி தேவைப்படும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். நான் சில கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் வளர்க்கப்பட்டேன், அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன்" என்று அவர்களை திரும்பி அனுப்பி விட்டேன் என்று கட்கரி கூறினார். இதே போல ஊடகங்களும் தங்கள் பணியின் மீது நம்பிக்கை வைத்து, அடுத்த தலைமுறைக்கும் அதைச் செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
#WATCH | Nagpur, Maharashtra | Union Minister Nitin Gadkari says, "I do not want to name anyone but a person said to me, if you are going to become a Prime Minister, we will support you. I said, why you should support me, and why I should take your support. To become a Prime… pic.twitter.com/yo6QDpqq5b
— ANI (@ANI) September 15, 2024
ஆனால் சில நிருபர்கள் இங்கு நேர்மையாக இல்லை என்று வருத்தம் அடைந்தார். அவர்களில் சிலர் மக்களுக்கு தகவல்களைப் பெற உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆர்டிஐ), மற்றவர்களைக் காயப்படுத்த அல்லது தங்களுக்கு பணம் சம்பாதிக்க அதைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார். மேலும் நிருபர்களில் சிலர் ஆடம்பரமான கார்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்க நேர்மையற்ற வழிகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களை பற்றி பேசினார். RTI பயன்படுத்தி ஒரு பத்திரிகையாளர் பொதுப்பணித் துறையில் சில ஊழியர்களை பயமுறுத்த முயற்சித்தார், இது குறித்து அந்த அதிகாரி என்னிடம் கூறினார். நான் அவரிடம், அந்த பத்திரிகையாளர் உங்கள் அலுவலகத்திற்கு வந்ததும், கதவைப் பூட்டிவிட்டு அடி கொடுங்கள் என்று கூறினேன் என நகைச்சுவையாக தெரிவித்தார்.
அதன் பிறகு அந்த பத்திரிக்கையாளர் பணியாற்றிய நாளிதழ் புழக்கத்தில் இருந்தே நீங்கியது என்று தெரிவித்தார். இது தவிர மேலும் சில கதையைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பத்திரிகையாளர் தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தர வேண்டும் என்றும் அரசாங்க அதிகாரியை மிரட்டினார். இதற்காக அந்த ஊழியரை அடிக்கடி தொந்தரவு செய்தார். விளம்பரம் கொடுக்கவில்லை என்றால், தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் காவல்துறையில் பொய்யான புகார் அளிக்கும் அளவுக்கு அந்த பத்திரிகையாளர் சென்றதாக அவர் கூறினார்.
தங்கள் வேலைகளில் நேர்மையாக செயல்படாத பத்திரிகையாளரை பற்றி கவலை பட்ட கட்காரி, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு கேட்டுக்கொண்டார். சில மோசமான செய்தியாளர்கள் இருந்தாலும், தங்கள் பணி விதிகளை பின்பற்றும் நல்லவர்கள் பலர் உள்ளனர் என்றும் அவர் கூறினார். எமர்ஜென்சி காலத்தில், பொய்யான குற்றத்திற்கு சிறைவாசத்தை எதிர்கொண்டபோதும், தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருந்து, சமரசம் செய்ய மறுத்த பத்திரிகையாளர்களின் உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்.
மேலும் படிக்க | அன்னபூர்ணா உரிமையாளர் விவகாரம்: கார்கே சாடல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ