அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் உயிரிழப்பு. இதனையடுத்து உ.பி அரசாங்கம் அக்கல்லூரி முதல்வரை சஸ்பெண்டு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரிவு வரியாக பலி எண்ணிக்கை:-
ஆகஸ்ட் 7: 9 (4 NICU, 2 AES, 3 non-AES)
ஆகஸ்ட் 8: 12 (7 NICU, 3 AES, 2 non-AES)
ஆகஸ்ட் 9: 9 (6 NICU, 2 AES, 1 non-AES)
ஆகஸ்ட் 10: 23 (14 NICU, 3 AES, 6 non-AES)
ஆகஸ்ட் 11: 7 (3 NICU, 2 AES, 2 non-AES)
ஆக்ஸிஜன் பயன் பாட்டிற்க்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படததால், ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாகவும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 60 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.