Indian media works நடத்திய இந்தியன் விருதுகள் 2024, விருதுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள Quality in sabari நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவன தலைவர் ஜான் அமலன், சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயசீலன் IAS (controller of Defence Accounts) மற்றும் இந்தியன் விருதுகள் 2024 பெற்ற பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியன் விருதுகள் 2024 விருதுகள் சினிமா, சின்னத்திரை, அரசியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றும்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவும் விதமாக இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலன் மற்றும் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்து ஜெயசீலன் ஐஏஎஸ் (Controller of Defence Accounts) அதிகாரியிடம் ரூ. 1,00,000 ரூபாய்க்காண நன்கொடையை வழங்கினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவர் ஜான் அமலன், இந்தியன் விருதுகள் 2024 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றதாகவும் Dynamic leader of Tamilnadu politics விருது அமைச்சர் மதிவேந்தன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு Greatest of all time in indian cinema விருது வழங்கப்பட்டதாகவும் இதனை அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டதாக கூறினார். மேலும் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ்க்கு பிரேமலதா விஜயகாந்த் வழங்கியதாக கூறினார். பாதுகாப்புத் துறையில் சிறந்த சேவைக்கான விருது ஜெயசீலன் {(Controller of Defence Accounts) ஐஏஎஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், சமூக விடுதலைக்கான விருது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இளைஞர்களின் அரசியல் நம்பிக்கைக்கான விருது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மோனிஷ்வரனுக்கு வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும் சினிமா பரபலங்கள்,சமூக சேவகர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரிக்கப்பட்டதாக கூறினார். வருகின்ற ஆண்டுகளில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரில் வருடம் தோறும் விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். நான் ஒரு விஜய் ரசிகர் எனக் கூறியவர் விஜய் அவர்களின் ரசிகனாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கக்கூடிய தனக்கு விஜய் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு, எதிர்காலத்தில் விஜய் அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பது தனது விருப்பம் என கூறினார்.
மேலும் படிக்க | Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ