'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்...' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 1, 2025, 07:55 PM IST
'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்...' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு title=

Minister Moorthy Issue, Viral Video: மதுரை தமுக்கம் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சாதி ரீதியாக பேசியது தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,"ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்து பேர் இறந்துபோனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும்போது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின்தங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது" என்றார். மேலும், அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், அந்த வீடியோவை ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News