குடிகாரர்கள் குடித்து விடுட் செய்யும் அட்டகாசங்களை பற்றி கேள்விப்படிருக்க கூடும். ஆனால், இன்று நீங்கள் கேட்கப்போகும் செய்தி கொஞ்டம் வித்தியாசமானது.
உஜ்ஜயினியில் உள்ள பஹதுர்கஞ்சில் இருக்கும் மதுப்பிரியரின் புகார் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். லோகேந்திர சோதியா என்ற நபர் 2 நாட்டு சரக்கு மதுபாட்டில்களை வாங்கியிருந்தார்.
மது அருந்திய லோகேந்திரன், போதை ஏறவில்லை என்பதால் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதி, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
கலப்பட மதுபானம் குறித்து உள்துறை அமைச்சர் புகார்
லோகேந்திரா கூறுகையில், நான் கடந்த 20 வருடங்களாக குடித்து வருகிறேன். அதனால், மதுவில் கலப்படம் இருப்பது எனக்கு குடித்த உடனேயே தெரிய வந்தது என கூறிய அவர், இது குறித்து புகார் அளித்துள்ளார். கலப்பட மதுபானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எழுத்துப்பூர்வ புகார் மனுவில் உள்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.
மதுபான மாதிரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது
லோகேந்திரன் உஜ்ஜைன் கலால் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த பாட்டிலில் ஆல்கஹால் இல்லை, தண்ணீர் இருந்தது என்று லோகேந்திரன் தனது புகாரில் கூறியுள்ளார். ஆதாரமாக, அவர் இரண்டு குவார்ட்டர் சாராயத்தையும் போலீசில் டெபாசிட் செய்துள்ளார். இது குறித்து கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வேறு எந்த குடிகாரருக்கும் இது நடக்கக்கூடாது என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவும் லோகேந்திரா கூறியுள்ளார்.
புகார்தாரர் நுகர்வோரிடம் மோசடி செய்வதாக புகார்
ஒப்பந்ததாரர் தண்ணீர் கலந்த மதுபானங்களை விற்பனை செய்வதாக லோகேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். இதனால், அதிக அளவில் மது வாங்கு நேரிடுவதால் நிதி இழப்பு ஏற்படுகிறது எனவும், கொடுக்கும் பணத்திற்கான சரக்கு கிடைப்பதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். மதுபான நிறுவனம் நுகர்வோரை ஏமாற்றுகிறது என்று எழுதியுள்ளார். லோகேந்திரா தனது புகாரின் நகலை ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR