New Delhi: நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரம் (Nirbhaya Case) மற்றும் கொலை வழக்கின் குற்றவாளியான முகேஷ் குமார் சிங், இப்போது தனது பழைய வழக்கறிஞர் மீது குற்றஞ்சாட்டிய அவர், சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் இருகிறது என்று கூறினார். அத்தகைய சூழ்நிலையில், எனது மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் அவர் சீராய்வு தீர்க்கும் மனு மற்றும் பிற சட்ட தீர்வுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, இந்த முறை முகேஷ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன:
முகேஷின் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா சார்பாக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், இந்திய அரசு, டெல்லி அரசு மற்றும் நீதிமன்ற ஆலோசகர் ஆகியோர் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சதித்திட்டத்திற்கு முகேஷ் பலியாக்கப்பட்டு உள்ளார் என்று விண்ணப்பம் கூறுகிறது. வரம்புச் சட்டத்தின் கீழ் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மூன்று ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறது என்று கூறப்படவில்லை. இதமூலம், அவருக்கு அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. அதனால்தான் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீராய்வு மனு மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்படலாம்:
எம்.எல்.சர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரம்பு சட்டத்தின் பிரிவு 137 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படாத ஒரு சட்டம் உள்ளது. இதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகும். இதன் அடிப்படையில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மூன்று ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது.
சட்டரீதியான அனுமதி மறுக்ப்பு:
இவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது போல பார்த்தால், மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு முகேஷுக்கு கால அவகாசம் இருந்தது. அதாவது ஜூலை 2021 வரை ஆகும். நீதிமன்ற ஆலோசகர் வலுக்கட்டாயமாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சொல்லி உள்ளார். சட்டத்தை சரியாக பயன்படுத்துவது தான் அரசாங்கத்தின் கடமைப்யாகும். இந்த வழக்கில் முகேஷுக்கு சட்டரீதியான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.