புத்தாண்டு 2020: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 1, 2020, 11:01 AM IST
புத்தாண்டு 2020: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து title=

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வந்துள்ளது. 2020 ஆண்டை உலகமே கோலாகலமாக வரவேற்றது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று புத்தாண்டடை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது.,

பிறக்கும் புத்தாண்டில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கும் இதுவே தக்க தருணம் ஆகும். இந்த புத்தாண்டு, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது.,

2019 அற்புதமான ஆண்டாக இருந்தது. மாற்ற முடியாது என்று நினைத்திருந்த விஷயங்களை நாம் மாற்றினோம். சாத்தியம் என்று நினைக்காத பல விஷயங்களை சாதித்து காட்டினோம். அதுபோல், 2020-ம் ஆண்டு, இந்தியாவை மாற்றி அமைக்கவும், 130 கோடி இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கவுமான முயற்சிகளின் தொடர்ச்சியாக அமையும்.

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News