New Parliament Building: டெல்லியில் நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 உறுப்பினர்களும் அமர இயலும்.
அதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கை அருகே நேருவுக்கு, திருவாடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த செங்கோல் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தாலும், பாஜக அவை அனைத்தையும் மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் கீழ்வருமாறு:
- சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் இணையதளத்தின்படி, கிடைத்த இடத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய புதிய கட்டடம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும்.
- புதிய நாடாளுமன்றத்தில் ஒரு அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இது கட்டமைப்பின் ஒரு கூடுதல் அம்சமாகும். இது குடிமக்களை ஜனநாயகத்தின் இதயத்தில் வைக்கிறது என சென்ட்ரல் விஸ்டா திட்ட இணையதளம் கூறுகிறது.
The New Parliament building is an architectural marvel that represents the resolve of 1.4 billion Indians to build a new nation under the leadership of PM @narendramodi Ji.#MyParliamentMyPride pic.twitter.com/NMbiDEAPou
— Amit Shah (@AmitShah) May 27, 2023
- புதிய நாடாளுமன்றம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகம் வகையில் கட்டடப்பட்டுள்ளது. இது திறந்த முற்றத்தை நிறைவுசெய்ய ஒரு மைய ஓய்வறையைக் கொண்டுள்ளது மற்றும் உறுப்பினர்களை தொடர்புகொள்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் கருப்பொருள் முறையே இந்தியாவின் தேசிய பறவை (மயில்) மற்றும் தேசிய மலர் (தாமரை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
- இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட நூலகத்தை இந்தக் கட்டடம் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்...!
- புதிய வளாகம் "பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமை கட்டிடம்" ஆகும். இது ஆற்றல் செயல்திறனை மையமாகக் கொண்டது. இது இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
- இந்த புதிய வளாகம் சமீபத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய அதி நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட செயல்திறனுக்காக இது பெரிய குழு அறைகளையும் கொண்டிருக்கும்.
Delhi | The New Parliament building will be inaugurated by Prime Minister Narendra Modi tomorrow, May 28. #NewParliamentBuilding pic.twitter.com/cEamIniCQV
— ANI (@ANI) May 27, 2023
- 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற மத்திய அரசின் உணர்வை வெளிக்காட்டும் வகையில், கட்டடத்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்டுள்ளன.
- கட்டடத்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கல் ராஜஸ்தானின் சர்மதுராவில் இருந்து வாங்கப்பட்டது. அதேசமயம் மக்களவை அறைக்குள் நிறுவப்பட்ட கேசரியா பச்சைக் கல் உதய்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. மரச்சாமான்கள் மும்பையில் வடிவமைக்கப்பட்டது. அசோக சின்னத்தை சிற்பம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அவுரங்காபாத் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது.
- கட்டுமான நடவடிக்கைகளுக்கு கான்கிரீட் கலவையை உருவாக்க ஹரியானாவில் உள்ள சர்க்கி தாத்ரியில் இருந்து தயாரிக்கப்பட்ட எம்-சாண்ட் மணல் பயன்படுத்தப்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நாளை நேரலையில் நாடு முழுவதும் ஒளிப்பரப்பப்பட உள்ளது. காலை தொடங்கும் நிகழ்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Video: பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம்... வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ