திருமணத்துக்கு ₹25000, மருத்துவ காப்பீடு -முதல்வர் வாக்குறுதி!

ஏழை பெண்கள் திருமணத்துக்கு ₹25,000, ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 8, 2019, 07:58 PM IST
திருமணத்துக்கு ₹25000, மருத்துவ காப்பீடு -முதல்வர் வாக்குறுதி! title=

ஏழை பெண்கள் திருமணத்துக்கு ₹25,000, ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்!

ஒடிசா மாநிலத்தில் தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபைக்கான தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 29 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மாநிலத்தில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்திடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் நேற்று ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுதோறும் ₹10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, ஏழை பெண்கள் திருமணத்துக்கு ₹25,000 நிதியுதவி, பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இருந்து இறுதியாண்டு வரையிலும், மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகள் வரையிலும் கல்லூரிகளில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வசதி, 500 கோடி ரூபாய் நிதிதொகுப்புடன் நெல் கொள்முதல் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான சீருடை தயாரிப்பில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை என பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

147 சட்டமன்ற தொகுதிகள், 21 மக்களவை தொகுதிகள் கொண்ட ஒரிசா மாநிலத்தில் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 29 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Trending News