புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்கள் பிடித்துப் பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபேரவை உறுப்பினர்கள், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை ஒரு மனதாகத் தேர்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, இன்று, நடந்த பதவி ஏற்பு விழாவில், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 3-ம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தனர். அப்போது, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி என்.ஆர் காங்கிரஸ், பாஜக MLA-க்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கினர்.
இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த யூனியன் பிரதேச செயலாளர் ஜெயபால், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வராக என்.ரங்கசாமி 7-ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்குப் பதவியேற்க உள்ளார்’’ என்று தெரிவித்தார்.
கொரோனா பரவலை (Corona Virus) கருத்தில் கொண்டு எளிமையான முறையில் பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர், சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி நிலுவையில் உள்ள சில கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது, முதியோர், கணவனை இழந்த பெண்களுக்கு பென்ஷன் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செண்டாக் பணம் வழங்குவது ஆகியவை தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார் .
ALSO READ | தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR