அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிகை!
மும்பை மற்றும் அதை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. அரபுக் கடலில் அதிக உயரத்திற்கு அலை வீசியதாலும், பிற்பகலில் பெய்த மழையினாலும், ரயில் தண்டவாளங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குர்லா, சியோன் மற்றும் சுன்னாபாத்தி பிரிவு நோக்கி நீர் பின்னோக்கி தண்ணீர் சென்றது. குர்லா-சியோன் நிலையங்களுக்கிடையிலான புறநகர் ரயில் சேவையின் முக்கிய பிரிவு மற்றும் துறைமுக பிரிவிலுள்ள, குர்லா மற்றும் சுன்னாபாத்தி இடையே புறநகர் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் இருந்து, வெளியேற விரும்பும் பயணிகளுக்காக, நவி மும்பையில் வடாலா சாலை மற்றும் வாஷி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில், வடலாவிலிருந்து 12 பேருந்துகள் வாஷிக்கு புறப்பட்டிருந்தன. அதேநேரம், விரார் மற்றும் சர்ச்ச்கேட் இடையேயான மேற்கு பாதையில் புறநகர் ரயில்கள் பெரிய தாமதமின்றி இயக்கப்படுகின்றன.
மும்பையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் தானே, பால்கர் மற்றும் நவி மும்பையில் உள்ள மக்கள் தினமும் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதால், ரயில்களை ரத்து செய்வதால் ஏற்படும் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய ரயில்வேயின் லேட்டஸ்ட் தகவல்களின்படி, தாதர் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணியளவில் ஒரு ரயில் கல்யாண் புறப்பட்டுள்ளது.
#WATCH: Flooding in premises of Trimbakeshwar Temple in Nashik following incessant rainfall. #Maharashtra pic.twitter.com/e2RVbAOeFx
— ANI (@ANI) August 4, 2019
ஆகஸ்ட் 3 ம் தேதி மதியம் 1 மணி முதல் அடுத்த 24 மணிநேரங்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் கடல் பகுதிக்கு அருகே வருவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு கொங்கன் பகுதிகளான மும்பை, தானே, பல்கர் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 4 முதல் 6 மணி நேரத்துக்கு மிக அதிக மழை பொழிவு இருக்கும் என்றும், தானேவில் இருக்கும் அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு கூறியுள்ளது.