காப்புரிமை மீறல்; கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு

மும்பையை சேர்ந்த பாலிவுட் திரைப்பட இயக்குநர் சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2022, 08:06 AM IST
காப்புரிமை மீறல்; கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு எதிராக போலீஸார் வழக்கு  பதிவு title=

மும்பையை சேர்ந்த பாலிவுட் திரைப்பட இயக்குநர் சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார்.  திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் நிலையில், அந்த திரைப்படம் யூடியூப்பில் (Youtube) சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தை யாருக்கும் விற்கவில்லை என்னும் போது, இது காப்புரிமையை மீறிய செயலாகும். 

லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ள இந்த திரைப்படத்தை, யூட்யூபில் (Youtube)  இருந்து உடனே அகற்ற வேண்டும் என பல முறை புகார் அளித்துள்ள போதிலும், திரைப்படத்தை நீக்க  நடவடிக்கை  ஏதும் எடுக்கப்படவில்லை என பாலிவுட் திரைப்பட இயக்குநர் சுனில் தர்ஷன் புகார் தெரிவித்துள்ளார்.

ALSO READ | ‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

யூடியூப் நிறுவனம் இந்த திரைப்படத்தை பதிவேற்றி, விளம்பரங்கள் மூலம் பெரும் வருவாயை ஈட்டியதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது

காப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் யூடியூப்பில் திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை மற்றும் Youtube நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற பாலிவுட் படத்தில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பத்ம விருதுகள் 2022: சுந்தர் பிச்சை, நீரஜ் சோப்ராவுக்கு விருது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News