நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிள்ளது. தற்போதைய 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தநிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி நாடு முன்னேறி வருகிறது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், குடியரசுத் தலைவரின் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் போன்றவை மகளிருக்கான சக்தி என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்றும், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது என கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்குப்பின் பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் மக்கள் ஆசியுடன் இந்த பயணம் தொடரும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ