செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவிவருவது வதந்தி என நிதி அமைச்சகம் அறிவிப்பு...!
வங்கிகளுக்கு பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் தொடர் விடுமுறைகள் வருவதால் மக்கள் உஷாராக இருக்கும்படி செய்திகள் சமூக வளைதலங்களில் பரவியது. அதாவது, செப்டம்பர் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), செப்டம்பர் 3 (திங்கட்கிழமை) ஜன்மாஷ்டமி, மற்றும் செப்டம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என 4 நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது.
இதையடுத்து மத்திய நிதியமைச்சகம், செப்டம்பர் 8 ஆம் தேதி (2-வது சனிக்கிழமை) தவிர அடுத்த வாரம் முழுவதுமே வங்கிகள் செயல்படும் என தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பி.எப் மற்றும் ஓய்வூதிய பிரச்னை காரணமாக ஆர்.பி.ஐ ஊழியர்கள் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவிவருவது வதந்தி என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது...!