5 ரூபாய்காக நடந்த கொலை முயற்சி... மாம்பழம் விற்பவர் மீது துப்பாக்கி சூடு..!!!

தில்லியை ஒட்டியுள்ள நாய்டாவில் மாம்பழம் வாங்குவதற்காக வந்தவருக்கும் பழ விற்பனையாளருக்கும் இடையே வெறும் 5 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

Last Updated : Jul 3, 2020, 05:35 PM IST
  • மாம்பழங்களை வாங்குவதற்காக வந்த பாதுகாவல் பணியில் உள்ள காவலருக்கும் பழ விற்பனையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
  • இந்த தகராறின் காரணமாக ஒரு பழ விற்பனையாளரை பாதுகாவலர் துப்பாக்கியினால் சுட்டார்.
  • குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புக் காவலரை நாய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.
5 ரூபாய்காக நடந்த கொலை முயற்சி... மாம்பழம் விற்பவர் மீது துப்பாக்கி சூடு..!!! title=

5 ரூபாய்காக நடந்த கொலை முயற்சியில், மாம்பழம் விற்பவர் துப்பாக்கியினால், சுடப்பட்டார். மாம்பழம் விலை குறித்து பேரம் பேசுகையில் ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் ஏற்பட்டது.

ALSO READ |  ஜம்மு காஷ்மீரில் CRPF நடத்திய தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதி கொலை...!!!

கவுதம் புத் நகர்( Gautam Budh Nagar): தில்லியை ( Delhi)  ஒட்டியுள்ள நொய்டாவில் (Noida) உள்ள கோடா பகுதியில் மாம்பழங்களை வாங்குவதற்காக வந்த பாதுகாவல் பணியில் உள்ள காவலருக்கும் பழ விற்பனையாளருக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு  பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை வெறும் 5 ரூபாய்க்காக நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

பாதுகாவல் பணியில் உள்ள காவலர் சத்யேந்திர பாண்டே, இந்த தகராறின் காரணமாக ஒரு பழ விற்பனையாளரை துப்பாக்கியினால் சுட்டார். இதனால் அந்த பழ விற்பனையாளருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர், காயமடைந்த பழ விற்பனையாளர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புக் காவலரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

ALSO READ | அஸ்ஸாமில் 22 மாவட்டங்களில் வெள்ளம்... 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு..!!!

அன்று நடந்தது என்னவென்றால், பாதுகாவலர் சத்யேந்திர பாண்டே தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது  அவர் ஒரு தெரு வியாபாரியிடம்  மாம்பழம் வாங்க சென்றார். அப்போது,  சத்யேந்திரா தெருவோரம் விற்பனை செய்து கொண்டிருந்த மாம்பழ விற்பனையாளரிடம், வெறும் ரூ .5 க்கு சண்டையிட்டார். இதற்குப் பிறகு, அங்கிருந்த வேறு சில விற்பனையாளர்கள் சிலரை அழைத்து பாதுகாவலர் சதேந்திர பாண்டேவை அடித்தனர்.

இதற்குப் பிறகு, கோபமடைந்த சத்யேந்திர பாண்டே கோபத்துடன் தனது அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த தனது துப்பாக்கியை எடுத்து வந்தார். இதன் பின்னர், சத்யேந்திரா தெருவில் இருந்த  பழ விற்பனையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். காலில் சுடப்பட்டு காயம் அடைந்த பழ விற்பனையாளரின் பெயர் பர்தேசி ஆகும். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்போது, ​​அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தில் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Trending News