மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
எனினும், சட்டபேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் 6 மாத காலத்திற்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
எனவே, மேற்கு வங்க முதல்வரும், டி.எம்.சி தலைவருமான மம்தா பானர்ஜி (Mamata Banerjee) வானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவார். அவர் போட்டியிட ஏதுவாக, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சோபந்தேப் சட்டோபாத்யாய் வெள்ளிக்கிழமை பதவியை ராஜினாம அசெய்தார்
சட்டோபாத்யாய் தனது ராஜினாமாவை முறையாக மேற்கு வங்க (West Bengal) சட்டமன்ற சபாநாயகர் பிமான் பாண்டியோபாத்யா விடம் சமர்ப்பித்தார். முதல்வரின் நாற்காலியைப் தக்க வைத்துக் கொள்ள ஆறு மாதங்களுக்குள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மம்தா பானர்ஜி பவானிபூரிலிருந்து போட்டியிடுவார் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
West Bengal | TMC's Sovandeb Chatterjee resigns as MLA from Bhawanipore
"I have enquired from him if he has resigned voluntarily and without coercion. I am satisfied, and I have accepted his resignation," says West Bengal Assembly Speaker Biman Banerjee pic.twitter.com/qJtScYHUnO
— ANI (@ANI) May 21, 2021
ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR