நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை உயர்வு!!

நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக மத்திய வன துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 22, 2017, 06:16 PM IST
நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை உயர்வு!! title=

நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக மத்திய வன துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

2010 ம் ஆண்டு கணக்கெடுப்புபடி இந்தியாவில் 1706 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2014 கணக்குப்படி 2226 ஆக உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 2010 ல் 163 ஆக் இருந்த புலிகள் எண்ணிக்கை, 2014 ல் 229 ஆக உள்ளது.

நக்சல் பிரச்சனை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் சரியாக கணக்கெடுப்பு நடத்தப்படாததால் புலிகளின் எண்ணிக்கையை சரிவர கணிக்க முடியவில்லை என்றும், மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் புலிகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே புலிகள் எண்ணிக்கை அதிகமாக 406 என கர்நாடகத்தில் தான் உள்ளது. அடுத்தப்படியாக உத்தராகண்டில் 340 புலிகள் உள்ளன.

வேட்டையாடுதல் உள்ளிட்ட இயற்கைக்கு மாறாக இறந்த புலிகள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டில் 81 ஆகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3 புலிகள் கொல்லப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 18 புலிகளும், அஸ்ஸாமில் 12 புலிகளும், உத்தராகண்டில் 10 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.

Trending News