2வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - செவி சாய்க்குமா அரசு?

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, சுங்கச்சாவடிகளை கட்டணம் விவகாரம் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் 2_வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2018, 06:26 PM IST
2வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - செவி சாய்க்குமா அரசு? title=

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, சுங்கச்சாவடிகளை கட்டணம் விவகாரம் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் 2_வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பது மற்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பது, அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது, சுங்க கட்டணங்களை ஆண்டுக்கு ஒருமுறை 18 ஆயிரம் கோடியாக பெற்றுக்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றுமுதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு, தமிழ்நாடு உட்பட பல மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வேலை நிறுத்தம் காரணமாக நாமக்கல்லில் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நான்கரை லட்சம் லாரிகள் ஓடவில்லை. நாடுமுழுவதும் கிட்டத்தட்ட 65 லட்சம் லாரிகள் இயக்கவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படலாம். 

எனவே மத்திய அரசு, லாரி உரிமையாளர்கள் பிரச்சனைக்கு வெகு சீக்கரமாக தீர்வு காணவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த 19 ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவாரத்தை தோல்வியடைந்ததால், லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News