லோக்சபா தேர்தல் 2024: மேற்கு வங்காளத்திற்குப் பிறகு, பஞ்சாபிலும் காங்கிரசுக்கு அதிர்ச்சி

Lok Sabha Polls 2024: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும் என பலமுறை கூறியுள்ளேன் என்று பகவந்த் மான் கூறினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 24, 2024, 05:03 PM IST
லோக்சபா தேர்தல் 2024: மேற்கு வங்காளத்திற்குப் பிறகு, பஞ்சாபிலும் காங்கிரசுக்கு அதிர்ச்சி title=

Congress Vs Aam Aadmi Party: பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த வரை வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் தனது கட்சி கூட்டணி அமைக்காது என்று அறிவித்த சில மணி நேரங்களில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மானின் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த கருத்து தெரிவித்து இருப்பது தேர்தல் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை தோற்கடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா கூட்டணி' உருவாக்கப்பட்டது. 'இந்தியா கூட்டணி' உருவானதால் பாஜகவுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன் முக்கியத் தலைவர்கள் 'இந்தியா கூட்டணி'யை கடுமையாக விமர்சித்தனர். 'இந்தியா கூட்டணி' நிலைக்காது எனக் கூறினார். ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து 'இந்தியா கூட்டணி' கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். 

'இந்தியா கூட்டணி'க்கு சிக்கல்

ஆனால் தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் 'இந்தியா கூட்டணி' சிதைவதாகத் தெரிகிறது. ஏனெனில், மேற்கு வங்க முதல்வருக்குப் பிறகு, தற்போது பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி ம் 13 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க - மம்தா பானர்ஜி இல்லாமல், `இந்தியா கூட்டணி`யை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது: காங்கிரஸ்

மேற்கு வங்களாத்தில் தனித்து போட்டி -மம்தா பானர்ஜி

இன்று காலை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, மேற்கு வங்க தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மம்தாவின் இந்த கருத்துக்கு பிறகு இந்தியா கூட்டணியில் சலசப்பு ஏற்பட்டுள்ளது.

என்னை அழைக்கவில்லை -மம்தா பானர்ஜி கோவம்

பாரத் ஜோடோ நியாய் யாத்ராவிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் மல்லிகார்ஜுன் கார்கே அழைத்ததாக கூறியுள்ளார்.

பாஜகவை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள்

இந்தியா கூட்டணியின் தூண். மம்தா இல்லாத இந்தியக் கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது. நாளை நமது பயணம் மேற்கு வங்கத்தில் நுழைகிறது. சீட் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும். பாஜகவை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியின் முதல் முன்னுரிமை என்றும், வங்காளத்தில் இந்தியா கூட்டணி தேர்தலில் போட்டியிடும் என்றும் என்றார்.

மேலும் படிக்க - “மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை” மேற்கு வங்கத்தில் 2 சீட் ஒதுக்கியதால் காங்கிரஸ் கோபம்

மம்தா பானர்ஜியின் கருத்துக்கு என்சிபி ரியாக்சன்

மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து, என்சிபி (சரத் பவார் பிரிவு) தேசிய செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ, 'மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும் இந்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் பாஜக்வுக்கு எதிராக கடுமையாகப் போராடுவோம்" என்றார்.

மம்தா பானர்ஜியின் கருத்துக்கு ஆர்ஜேடி ரியாக்சன்

மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா, "தயவுசெய்து சிறிது நேரம் பொறுத்திருங்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கலாம். ஏதேனும் முரண்பாடு இருந்தால், இந்தியா கூட்டணி அதைத் தீர்க்கும்' என்றார். 

மேலும் படிக்க - INDIA Alliance: காங்கிரஸ் உடன் கூட்டு இல்லை... மம்தா பானர்ஜி அதிரடி - அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்

மக்களவை தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸுடனான கூட்டணி குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "ஜனவரி 16 ஆம் தேதி, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் பஞ்சாபில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்டி இருப்பார். பஞ்சாபில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட சாத்தியமில்லை என்பது வெட்ட வெளிச்சமானது.

பஞ்சாபில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை

இன்று செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சப் முதலமைச்சர் பகவந்த் மான், "முதலமைச்சராகவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருப்பதால், 13 மக்களவைத் தொகுதிகளில் எதையும் வேறு எந்தக் கட்சியுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை 13-0 என்ற கணக்கில் கைப்பற்றும். இந்த முறை நான் மக்களவையின் ஹீரோவாக மாறுவேன்" என்று கூறியுள்ளார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக இந்தியா கூட்டணி?

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக இந்தியா கூட்டணி இருக்க முடியுமா என்பதை வாக்காளர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும் படிக்க - இன்னும் கூட 25 வழக்குகள் போடுங்கள், நான் பயப்பட மாட்டேன் -ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News