புதுடெல்லி: ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் சபையில் இல்லாத நிலையில் இரு மசோதாக்களையும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தினார்.
மக்களவையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், திங்களன்று 2020 ஆம் ஆண்டின் ஹோமியோபதி மசோதா, 2020 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மாசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் போதுமான அளவில், உயர்தர ஹோமியோபதி மருத்துவர்களை உருவாக்கும் வகையில் மருத்துவ கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா ஹோமியோபதி நிபுணர்களின் சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில் உலகளாவிய சுகாதார சேவையாக செயல்பட ஊக்குவிக்கிறது.
ஹோமியோபதி மருத்துவர்கள், சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகளை பயன்படுத்திக் கொள்வதுடன், மேலும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ சேவையை மேம்படுத்த இந்த மசோதா வகை செய்கிறது.
மேலும் படிக்க | நாடாளுமன்றம்: மாநிலங்களவையில் 6, மக்களவையில் 17 MPக்களுக்கு கொரோனா பாதிப்பு!!!
இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணையம், அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் இந்திய மருத்துவ முறைமையில் போதுமான அளவில் உயர்தர மருத்துவ வல்லுநர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த மசோதா, மருத்துவ நிறுவனங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், வெளிப்படையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் இந்திய மருத்துவ முறையின் மருத்துவ பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவ சேவைகளின் அனைத்து அம்சங்களிலும் சிறந்த நெறிமுறைகளை கடைபிடித்து மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் படிக்க | 1962 போரில் லடாக் ரெசாங் லாவின் வீர வரலாறு தெரியுமா..!!