Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாட்டில் மக்களவைத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. நாடு முழுதும் முழு மூச்சுடன் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. தேர்தல் களம் களைகட்டியுள்ள இந்த நிலையில், பெரிய அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. விமர்சனங்களும் வாழ்த்துகளும் கொடி கட்டி பறக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தின் போது, முன்னாள் அமேதி எம்.பி., காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசினார். இன்று பிரச்சாரத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, ‘நாம் பெயரை மாற்றுவது, கிராமத்தை மாற்றுவது பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், குடும்பத்தை மாற்றுவது பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ராகுல் காந்தி வயநாட்டில், வயநாடுதான் தன் குடும்பம் என்றும் அங்குள்ள மக்கள் விசுவாசமானவர்கள் என்றும் கூறியுள்ளார்’ என தெரிவித்தார்.
‘வயநாட்டு மக்கள் விசுவாசமானவர்கள் என அவர் கூறினால், 15 ஆண்டுகளாக அவர் எம்பியாக இருந்த அமேதி மக்கள் விசுவாசமாக இல்லை என்று அர்த்தம். அவர் வயநாடு சென்று அமேதியை தவறாக பயன்படுத்துகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முறை அமேதி வாக்காளர்கள் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர்.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனது இல்லத்தில் யாதவ் சமூக மக்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி மக்கள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்று காந்தி குடும்பத்தினர், குறிப்பாக ராகுல் காந்தி விரும்புவதாகவும், அதனால்தான் ஏழையின் மகன் இந்தியாவின் பிரதமரானதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார். ‘வறுமையை சந்தித்து, உங்கள் அனைவரின் ஆசியுடன், தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையின் பலத்தால் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியை காங்கிரஸாலோ, காந்தி குடும்பத்தாலோ ஜீரணிக்க முடியவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ராமேஸ்வரம் கபே வழக்கு: பாஜகவின் வைத்த செக் - மம்தாவின் உடனடி அட்டாக்... முழு விவரம்
ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ளலாம்
ஸ்மிருதி இரானி மேலும் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் 15 வருடங்கள் மற்றும் எனது 5 வருடங்களை ஒப்பிட்டு பார்த்தால், காந்தி குடும்பம் அமேதியை எப்படி புறக்கணித்தது என்பதை புரிந்துகொள்ளலாம். அமேதியில் அவர்கள் 50 ஆண்டுகளில் செய்யாததை, 15 ஆண்டுகளில் ராகுல் காந்தி செய்யாததை, ஐந்தாண்டுகளில் எங்கள் ஆட்சி செய்திருக்கிறது,'' என்றார்.
வாய்க்கால்களை சுத்தம் செய்யும் எம்பி
“கிராமத்தில் நின்று வாய்க்கால்களை சுத்தம் செய்யும் எம்பி -ஐ நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அனைவரும் என்னை ஒரு சகோதரியாக கருதியதால் நான் ஒரு சகோதரியாக எனது கடமையை நிறைவேற்றினேன்.” என்றார் ஸ்மிரிதி இரானி.
தும்மினால் கூட வெளிநாட்டில் சிகிச்சை
“ராகுல் காந்திக்கு தும்மல் வந்தால்கூட வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவது வழக்கம். ஆனால், அமேதி மக்களுக்காக மருத்துவக் கல்லூரி கூட அவரால் கட்டப்படவில்லை. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசும், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசும் வந்த பிறகுதான் அமேதியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது” என கூறினார்.
மேலும் படிக்க | எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.. கவிதாவை காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ