Lok Sabha Election Result 2024 Live Update: தொடரும் சஸ்பென்ஸ்.. நீயா -நானா போட்டியில் காங்கிரஸ் vs பாஜக

Lok Sabha Election Result 2024 Live Update: மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி. தேர்தல் சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2024, 02:24 PM IST
    Lok Sabha Election Result 2024: 2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் அப்டேட்கள் உடனுக்குடன் இதோ...!
Live Blog

Lok Sabha Election Result 2024 Live Update: 18ஆவது மக்களவை தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் 272 தொகுதிகளை வெல்லும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியை அமைக்கும். மக்களவை தேர்தல் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளும், 26 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகின்றன.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 தொகுதிகளையும், 2019 தேர்தலில் 303 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 தொகுதிகளையும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளையும் கைப்பற்றி படுதோல்வியடைந்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த முறை இருந்த அதிமுக, சிரோன்மணி அகாலி தளம் ஆகியவை தற்போது இல்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுப்பட்டுள்ளது. இப்படி பல பிரச்னைகள் இருந்தாலும் நாங்கள் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. Exit Poll முடிவுகளும் பாஜக 350+ இடங்களையே பெறும் என்றே கணித்துள்ளன.   

மறுபுறம், காங்கிரஸ் கட்சியோ பாஜகவின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி அதன் பேரில் இந்த தேர்தலை சந்தித்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போட்டிகள் இருந்தாலும் நிச்சயம் 295 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி, நேருவின் சாதனையை நெருங்குவாரா அல்லது நேருவின் கொள்ளு பேரன் ராகுல் காந்தி அவர்களின் வியூகத்தை முறியடித்து, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க உதவுவாரா உள்ளிட்ட கேள்விக்களுக்கான பதில் இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். 

இன்று காலை 8 மணிக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் நிலவரம் விரைவில் வெளிவரும். 2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் அப்டேட்களையும், வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளையும், பல்வேறு மாநிலங்களின் அப்டேட்களையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

4 June, 2024

  • 21:23 PM

    நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி கொடுக்காமல் பாஜகவை தமிழ்நாடு ஏமாற்றினாலும்,பாஜக கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்த மாநிலங்கள் பல உள்ளன. அவை...

    மத்தியப் பிரதேசம் - 29 / 29
    குஜராத் - 25 / 26
    சத்தீஸ்கர் - 10 / 11
    பீகார் - 27 / 40
    கர்நாடகா - 19 / 28
    ஒடிசா - 19 / 21
    ஆந்திரா - 21 / 25
    ஜார்கண்ட் - 9 / 14
    ராஜஸ்தான் - 14 / 25
    உத்தரகாண்ட் - 5 / 5
    ஹிமாச்சல் - 4 / 4
    டெல்லி - 7 / 7

  • 20:24 PM

    தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது குடும்பத்தினருக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    புதிய ஆற்றல், புதிய உற்சாகம் மற்றும் மக்களின் தேவைகளை  நிறைவேற்ற புதிய தீர்மானங்களுடன் முன்னேறுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தனது நன்றி செய்தியில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

  • 19:26 PM

    தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல,  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை இந்திய கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி வருகின்ற நிலையில், தெலங்குதேசம் செய்தியாளர் சந்திப்பு ரத்தாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  • 18:36 PM

    மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது என்றும் மோடிக்கு எதிரான போரில் காங்கிரஸ் உடன் இருந்த செயல்பட்ட கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறோம் என்றும் அரசியலமைப்பை காப்பதற்கான முதல் போரில் வெற்றி கிட்டி இருக்கிறது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

  • 17:47 PM

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் எந்த விதமான புகாரும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் ஆறாம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன் பிறகுதான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலகிக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • 17:28 PM

     ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க முன்வந்த இந்திய கூட்டணி! ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வந்தார் குறிப்பிடத்தக்கது.

  • 17:03 PM

    Lok Sabha Election Result 2024 Live Update: பிரதமர் மோடி வெற்றி

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி பெற்றார். மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,59,084 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

  • 16:54 PM

    Lok Sabha Election Result 2024 Live: பாஜகவுக்கு கைக்கொடுக்காத ராமர் கோயில்...!

    அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

  • 16:30 PM

    Lok Sabha Election Result 2024 Live: நேரலையில் கண்ணீர்விட்ட தேர்தல் கணிப்பாளர்

    ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தனது கணிப்பு முற்றிலும் தவறாக போனதை எண்ணி நேரலை நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆக்சிஸ் மை இந்தியா பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • 16:07 PM

    Lok Sabha Election Result 2024 Live Update: ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

    காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரேபரேலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றிருந்தார். கேரளாவின் வயநாட்டிலும் அவர் பெரும் முன்னிலையோடுதான் இருந்தார். முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று வாக்கு எண்ணிக்கைகளில் தாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.  

  • 15:40 PM

    Lok Sabha Election Result 2024 Live: ராகுல் காந்தி வெற்றி

    உத்தர பிரேதசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தற்போது வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் அவர் போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் 3 லட்சத்திற்கும் மேலான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

  • 15:33 PM

    Lok Sabha Election Result 2024 Live: சசிதரூர் வெற்றி

    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றார். சசி தரூர் இந்த தொகுதியில் நான்காவது முறையாக வெற்றியை பதிவு செய்திருக்கிறார். சசிதருரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தோல்வியடைந்தார். 

  • 15:07 PM

    Lok Sabha Election Result 2024 Live: சீனுக்குள் வரும் அமித்ஷா... சம்பவம் செய்வாரா? 

    இந்தியா கூட்டணி கட்சிகள் தொலைபேசியில் பாஜகவின் கூட்டணி தலைவர்களான நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் தற்போது ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • 14:48 PM

    Lok Sabha Election Result 2024 Live: சூடுபிடிக்கும் களம்... மீட்டிங் போடும் தலைவர்கள்!

    இன்று மாலை 6:00 மணிக்கு இந்திய கூட்டணி தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். அதேபோல், இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவும் ஆலோசனை நடத்த இருக்கிறது.

  • 14:45 PM

    Lok Sabha Election Result 2024 Live: மதியம் 2.40 மணி முன்னணி நிலவரம் 

    முன்னிலை (இந்தியா)

    தேசிய ஜனநாயக கூட்டணி - 294

    இந்தியா கூட்டணி - 232

    மற்றவை -17

    முன்னிலை (தமிழ்நாடு)

    திமுக - 39

    அதிமுக கூட்டணி - 1

    பாஜக - 0

  • 14:30 PM

    Lok Sabha Election Result 2024 Live: திரைமறைவில் பேச்சுவார்த்தை

    தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி பலப்படுத்தி மத்தியில் ஆட்சி அமைக்க திரைமறைவில் கடும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • 14:09 PM

    Lok Sabha Election Result 2024: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னிலை

    ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது ஆளும் கட்சியான பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. அக்கட்சி 13 இடங்களில் முன்னிலை இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • 13:35 PM

    Lok Sabha Election Result 2024: பலமடையும் இந்தியா கூட்டணி

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிஷ் குமார் பீகாரில் 14 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 16 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன. இருப்பினும் இந்த இரு கட்சிகளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

  • 13:06 PM

    Lok Sabha Election Result 2024 Liveதோல்வியடைந்தார் பிரஜ்வெல் ரேவண்ணா

    கர்நாடகாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனுமான பிரஜ்வெல் ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேலிடம் தோல்வியை தழுவினார். 2019ஆம் ஆண்டில் பிரஜ்வெல் ரேவண்ணா இத்தொகுதியில் எம்பியாக இருந்தார். இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடா 20 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

  • 12:36 PM

    Lok Sabha Election Result 2024 Live: பீகாரில் முன்னேறும் பாஜக

    மொத்தம் 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளிலும், இந்தியா 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருக்கின்றன. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில், இந்தியா கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்திருக்கிறது. பாஜகவின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.

  • 12:10 PM

    Lok Sabha Election Result 2024 Live: கேரளாவில் ஆதிக்கத்தை தொடரும் காங்கிரஸ்!

    கேரளாவில் மொத்தம் உள்ள 20 இடங்களில் காங்கிரஸ் 18 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் சிபிஎம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.

  • 11:53 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: காங்கிரஸ் ஆலோசனை

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், டெல்லி உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மேல்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

  • 11:32 AM

    Lok Sabha Election Result 2024 Live: ஒடிசாவில் பாஜக...

    ஒடிசாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜகவும், 2 இடங்களில் பிஜூ ஜனதா தளமும், 1 இடத்தில் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 136 தொகுதிகளில் பாஜக 71 இடங்களையும், பிஜூ ஜனதா தளம் 48 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இது நவீன் பட்நாயக்கின் அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவாகும். 

  • 11:11 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: கலக்கும் மம்தா பானர்ஜி

    மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 31 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. 

  • 11:07 AM

    Lok Sabha Election Result 2024 Live: ரோஜா பின்னடைவு

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட நடிகையும், அம்மாநில அமைச்சருமான ரோஜா கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். 

  • 10:48 AM

    Lok Sabha Election Result 2024 Live: காலை 10.45 மணி முன்னிலை நிலவரம்

    தேசிய ஜனநாயக கூட்டணி - 292 இடங்கள்

    இந்தியா கூட்டணி - 221 இடங்கள்

    மற்றவை - 30 இடங்கள்

    Source: Zee News

  • 10:26 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: 3 முக்கிய மாநிலங்கள்

    பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முட்டி மோதி வரும் சூழலில், தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. 

  • 10:10 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: தலைநகரில் பாஜக முன்னிலை

    தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பாஜக 5 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 2 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

  • 10:00 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: குஜராத்தில் கால் பதிக்கும் காங்.,

    குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் தற்போது பாஜக 21 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

  • 09:50 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: மோடி தொடர்ந்து பின்னடைவு!

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் நான்காவது சுற்றிலும் பின்னடைவை சந்தித்திருக்கிறார், பிரதமர் மோடி.

  • 09:26 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: வாரணாசி தற்போதைய நிலவரம்

    PM Modi

  • 09:23 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: மோடி பின்னடைவு

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 6000 வாக்குகள் பின்னடைவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • 09:15 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: இந்தியா கூட்டணி முன்னிலை பெற்ற மாநிலங்கள்

    தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, ஹரியானா, மேகாலாயா, உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 

  • 09:07 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: பாஜக முன்னிலை பெற்றுள்ள மாநிலங்கள்

    உத்தர பிரதேசம், கர்நாடக, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 

  • 08:46 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: பாஜக 300+ முன்னிலை

    வாக்கு எண்ணிக்கை தொடங்கி 45 நிமிடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 483 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம். 

    தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) - 304 இடங்கள்

    இந்தியா கூட்டணி (INDIA) - 144 இடங்கள்

    மற்றவை - 35 இடங்கள்

  • 08:38 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவு...

    பெரும்பாலான தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

  • 08:31 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: காலை 8.30 மணி நிலவரம்

    வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 300 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம். 

    தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) - 203 இடங்கள்

    இந்தியா கூட்டணி (INDIA) - 82 இடங்கள்

    மற்றவை - 15 இடங்கள்

    (Source: Zee News)

  • 08:15 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: இந்தியா கூட்டணி முன்னிலை

    தபால் வாக்கு எண்ணிக்கையின் தொடக்க கட்டதத்தில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவித்தனர். 

  • 08:04 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: நிலவரம் எப்போது தெரியும்?

    தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அந்த சுற்றுகள் நிறைவடைந்த பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்குள் ஓரளவுக்கு முன்னிலை நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம். மதியம் 2 மணிக்குள் மத்தியில் ஆட்சியை கைப்பற்றப்போவது என்பது தெரிய வரும்.

  • 08:00 AM

    Lok Sabha Election Result 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை 

    நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதன் நிலவரங்கள் விரைவில் வெளிவரும். 

  • 07:48 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: இந்தியா கூட்டணியின் 295*

    பாஜக 400 இடங்களை கைப்பற்றுவோம் என பகீரங்கமாக பிரச்சாரம் செய்யும் வேளையில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தாங்கள் 295 தொகுதிகளை கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆட்சி அமைக்க 272 இடங்கள் பெரும்பான்மை இருக்க வேண்டும். 

  • 07:40 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: பாஜகவின் 400*

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி என்பது 400 தொகுதிகளை வென்றுவிடும் என்று பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது. Exit Poll முடிவுகளும் பாஜகவின் இந்த பிரச்சாரத்தை வலுவாக்கியது எனலாம். கடந்த முறை வென்ற 303 தொகுதிகளை விட பாஜக தனித்தே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தேர்தல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

  • 07:14 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: பாஜக vs காங்கிரஸ்

    பாஜக மொத்தமாக போட்டியிட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை - 441

    காங்கிரஸ் போட்டியிட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை (இந்தியா கூட்டணி) - 285

    காங்கிரஸ் கூட்டணியில்லாமல் தனித்து நிற்கும் இடங்கள் - 43 

    மொத்தமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் - 328

  • 06:45 AM

    Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் புகார்

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவட்ட ஆட்சியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கும்படி காங்கிரஸிடம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

    அதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மாவட்ட ஆட்சியர்கள் என்பதற்கு பதில், 150 அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் உள்துறை அமைச்சரின் அழுத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை, யாருடைய சார்பாக அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அவர்களையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதில் குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம், பீகார், ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  • 06:35 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: முதலில் தபால் வாக்குகள்

    வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்மூலம், தபால் வாக்குகளின் நிலவரமும் காலை 8.45 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

  • 06:23 AM

    Lok Sabha Election Result 2024 Live Update: தெற்கின் நட்சத்திர வேட்பாளர்கள்

    காங்கிரஸ்: சசி தரூர் - திருவனந்தபுரம் (கேரளா)

    ஜேடிஎஸ்: ஹெச்.டி. குமாரசாமி - மாண்டியா (கர்நாடகா)

    ஏஐஎம்ஐஎம்: அசாதுதீன் ஓவைசி - ஹைதராபாத் (தெலுங்கானா)

    திரிணாமுல் காங்கிரஸ்: மஹுவா மொய்த்ரா - கிருஷ்ணாநகர் (மேற்கு வங்கம்)

    பாஜக: அண்ணாமலை - கோவை (தமிழ்நாடு) 

  • 06:13 AM

    Lok Sabha Election Result 2024: நட்சத்திர வேட்பாளர்கள்

    பாஜக: நரேந்திர மோடி - வாராணாசி (உத்தர பிரதேசம்)

    காங்கிரஸ்: ராகுல் காந்தி - வயநாடு (கேரளா), ரேபரேலி (உத்தர பிரதேசம்)

    பாஜக: அமித் ஷா - காந்தி நகர் (குஜராத்)

    சமாஜ்வாதி கட்சி: அகிலேஷ் யாதவ் - கண்ணுஜ் (உத்தர பிரதேசம்) 

    பாஜக: ஸ்மிருதி இரானி - அமேதி (உத்தர பிரதேசம்)

    நிதின் கட்கரி - நாக்பூர் (மகாராஷ்டிரா)

  • 05:56 AM

    Lok Sabha Election Result 2024: இன்று காலை 8 மணி முதல்...

    தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இந்த 542 மக்களவை தொகுதிகளில் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் ஒடிசா சட்டப்பேரவை தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெற்ற 26 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றின் முடிவுகளும் இன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெறும். 

  • 05:51 AM

    Lok Sabha Election Result 2024: 7 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

    18ஆவது மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏப். 19ஆம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் நிறைவு பெற்றது. குஜராத்தின் சூரத் நகரில் மட்டும் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Trending News