விரைவில்! அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்போம் -எல்ஐசி தலைவர்

அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தை சந்தித்து அந்த நிறுவனம் தொடர்பான குழுவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கம் பெறுவோம் என்று எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 10, 2023, 07:27 AM IST
  • அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு.
  • நாடு முழுவதும் எல்ஐசி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
  • அதானி நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள விரும்புகிறோம்.
விரைவில்! அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்போம் -எல்ஐசி தலைவர் title=

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) தலைவர் எம்.ஆர்.குமார் நேற்று (வியாழன்) பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் அதானி குழுமத்தின் உயர் நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தி ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கம் பெறுவார்கள் என்றார். அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் மற்றும் முதலீட்டாளர்களால் எல்ஐசி (Life Insurance Corporation) கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் நிதி ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. 

மேலும் படிக்க: அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?

அதானி குழுமம் சந்தை கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாகவும், போலி நிறுவனங்களை தொடங்கி ரவுண்ட்-டிரிப்பிங் முறையில் பங்குகள் விலை முறைகேடாக உயரத்தப்பட்டு உள்ளதாகவும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமததிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இருப்பினும், அதானி குழுமம் அதை முற்றிலும் நிராகரித்தது மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

​​இந்நிலையில், எல்ஐசி தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், எங்கள் உயர்மட்ட நிர்வாகமும் அதானி குழும நிர்வாகிகளிடம் திரும்ப விளக்கம் கேட்க உள்ளோம். விரைவில் அவர்களை சந்தித்து விளக்கம் கேட்போம். அந்நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள விரும்புகிறோம். இருப்பினும், எல்ஐசி மற்றும் அதானி குழுமத்திற்கு இடையேயான சந்திப்பு குறித்த நேரம், நாள் பற்றிய எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. 

மேலும் படிக்க: அதானி குழுமத்தால் எல்ஐசி-க்கு பிரச்சனையா? காப்பீட்டு நிறுவனம் அளித்த விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News