பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு தற்போது 49 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இளமையாக இருக்க அவரின் டயட் மற்றும் பிட்னஸ் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு ஏறக்குறைய 50 வயது ஆக போகிறது. ஆனாலும் பல்வேறு இளம் நடிகைகளுக்கு தற்போதும் டப் கொடுத்து வருகிறார். இந்த வயத்திலும் அவரின் இளமை தோற்றம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதற்கு தினசரி உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு முறையை கடைபிடிப்பதாக ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். மேலும் தனது பிட்னஸ் ரகசியங்களையும் பகிர்ந்துள்ளார்.
எவ்வளவு கடினமான வேலைகள் இருந்தாலும் தினசரி உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க மாட்டேன். சில நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளையும் செய்வதற்காக தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரியான உணவையும் எடுத்து கொள்வது முக்கியம் என்பதையும் குறிப்பிடுகிறார். ஆரோக்கியமான உணவு மற்றும் தூக்கம் மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்.
பசி எடுத்தால் மட்டும் உணவை எடுத்து கொள்ள வேண்டும் எனவும், தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
அதே போல சாப்பிடும் போது மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்பதை ப்ரீத்தி ஜிந்தா வலியுறுத்துகிறார். என்ன மாதியான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் என்கிறார்.