New RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்

ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2021, 03:22 PM IST
New RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல் title=

New RBI Rules: ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சம்பளம், ஓய்வூதியம்  பெறுதல் மற்றும் இஎம்ஐ (EMI) செலுத்துதல் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நீங்கள் இனி வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், இப்போது நீங்கள் உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெற, சனி மற்றும் ஞாயிறு அதாவது வார இறுதி  காரணமாக தாமதம் ஏற்படும் நிலை இருக்காது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் இன்று  முதல் அமலாகிறது.

மாதத்தின் முதல் வாரம் ஒரு வார இறுதியில் வந்தால், மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. திங்கட்கிழமை அன்று சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த மாதம் ஜூன் மாதத்தின் கிரெடிட் பாலிஸி குறித்த மதிப்பாய்வின் போது, ​​வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், 24x7 ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS), NACH  ஆகியவற்றில் சேவைகளை மேம்படுத்தவும், தற்போது வங்கிகளில் வேலை நாட்களில் மட்டும் NACH சேவை இனி வார நாட்கள் முழுவதும் இயங்கும் என அறிவித்தார். 

ALSO READ: 7th Pay Commission DA Hike: ரூ.95,000 வரை உயரும் சம்பளம், கணக்கீடு இதோ!!

NACH என்பது இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் (NPCI) இயக்கப்படும் ஒரு தானியங்கி கட்டண முறைமை. இது டிவிடெண்ட், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான கடன் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. இது தவிர, மின் கட்டணம், எரிவாயு, தொலைபேசி, தண்ணீர் கட்டணங்கள், கடனுக்கான EMI, பரஸ்பர நிதி முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும், திங்கள் முதல் வெள்ளி வரை கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், இனி இந்த வேலையை வார இறுதி நாட்களிலும் மேற்கொள்ளலாம்.

NACH  என்பது பயனாளிகளுக்கான நேரடி மற்றும் நேரடி டிஜிட்டல் பரிமாற்றத்தின் (DBT) பிரபலமான, மிக முக்கிய டிஜிட்டல் முறையாக உருவெடுத்துள்ளது, இது தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்களின் போது அரசு மானியங்களை சரியான நேரத்தில் வழங்கவும், வெளிப்படை தன்மையை கொடுக்கவும் உதவுகிறது. தற்போது, ​​NACH சேவைகள் வங்கிகள் வேலை செய்யும் நாட்களில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், இனி ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல் இந்த வசதி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News