Hijab Ban: ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடரும்

Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2022, 12:49 PM IST
  • கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது
  • தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
  • ஹிஜாப் தடையை உறுதி செய்யும் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு தற்போதைக்கு அமலில் இருக்கும்
Hijab Ban: ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடரும் title=

புதுடெல்லி:  கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், 'தகுந்த வழிகாட்டுதலுக்காக' தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை உறுதி செய்த பழைய கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (2022 அக்டோபர் 13 வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதி சுதன்ஷு துலியா இந்த மனுக்களுக்கு அனுமதி வழங்கினார்.

எனவே, நீதிபதிகளுக்கு இடையே "கருத்து வேறுபாடு உள்ளது," என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா, மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்வதற்கு முன்பு 11 கேள்விகளைக் கேட்டார். "இறுதியில் இது தேர்வுக்குரிய விஷயம், வேறு ஒன்றும் இல்லை. பெண் குழந்தைகளின் கல்விதான் என் மனதில் முக்கியமாக இருந்தது. என் சகோதரர் நீதிபதியுடன் நான் மரியாதையுடன் உடன்படவில்லை" என்று நீதிபதி துலியா கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்களை நிராகரித்த போது, ​​இந்த விவகாரத்தை''தகுந்த வழிகாட்டுதலுக்காக'', உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ், "உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஹிஜாப்/புர்கா அணியக்கூடாது என்று கோரி வரும் நிலையில் நல்ல தீர்ப்பை எதிர்பார்த்தோம். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதல்கள் வரும்வரை கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது நல்லது; எனவே, ஹிஜாப் அணிய மாநில கல்வி நிறுவனங்களில் தடை தொடரும்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

இதற்கிடையில், இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பருண் சின்ஹா, "உச்சநீதிமன்றத்தின் பிளவு தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்காலத்திலும் பொருந்தும்" என்றார்.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சீருடை விதிகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடும் கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பல்வேறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், "அரசு அதிகாரிகளின் மாற்றாந்தாய் நடத்தை, மாணவர்களின் நம்பிக்கையைக் குலைக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News